V4UMEDIA
HomeNewsKollywoodலவ் டுடே ட்ரெய்லரை வெளியிட்ட சிம்பு

லவ் டுடே ட்ரெய்லரை வெளியிட்ட சிம்பு

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்தை இயக்குவதற்கு சற்று காலதாமதம் செய்து வந்தவர், திடீரென ஹீரோவாக அவதாரம் எடுத்து தான் நடிக்கும் படத்தை தானே இயக்கி வருகிறார்,

இந்த படத்திற்கு விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான லவ்டுடே என்கிற டைட்டில் வைத்துள்ளனர். பிரபல நிறுவனமான ஏஜிஎஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் நடித்த இவானா ‘லவ் டுடே’ படத்தின் நாயகியாகவும், சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை இன்று சிம்பு வெளியிட்டுள்ளார்.

இன்றைய இளைஞர்கள் குறிப்பாக காதலர்களின் மனநிலையை மையப்படுத்தி இந்தப்படம் உருவாக்கி உள்ளதை இந்த ட்ரெய்லர் அழகாக காட்டியுள்ளது. அந்தவகையில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பையும் இந்த ட்ரெய்லர் பெற்று வருகிறது.

Most Popular

Recent Comments