V4UMEDIA
HomeNewsKollywoodபொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு கமல் பாராட்டு

பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு கமல் பாராட்டு

அமரர் கல்கி 70 வருடங்களுக்கு முன்பு எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான வரலாற்று படமாக உருவாகி உள்ளது. இதன் முதல் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது.

நாவலில் கண்டுகளித்த அந்த சோழர் காலத்து கதாபாத்திரங்களை தற்போது திரை வடிவில் நம் கண்முன்னே உலவ விட்டுள்ளார் மணிரத்னம். படம் பார்த்த அனைவருமே மிகச்சிறந்த படம் என மணிரத்னத்தையும் படத்தில் நடித்த நடிகர்களையும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கமல் இந்த படத்தை சென்னையில் உள்ள ஜாஸ் சினிமாஸில் பார்த்துவிட்டு இந்த படம் குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின்போது அவருடன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் நிர்வாகி தமிழ்குமரன் மற்றும் படத்தின் கதாநாயகர்களாக நடித்த விக்ரம், கார்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முதன்முதலில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முயற்சி செய்தார். அது கைகூடவில்லை அவருக்கு அடுத்ததாக அதனை படமாக்கியே தீரவேண்டும் என நடிகர் கமல் மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டார் ஆனால் அந்த சமயத்தில் அதற்கான பட்ஜெட் மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டதால் அப்போதும் அது கைகூடாமல் போனது.

இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் அந்த கனவு நனவாகியுள்ளது. தான் உருவாக்க நினைத்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது திரைக்கு வந்துள்ளதை பார்த்து முதல் ஆளாக சந்தோஷப்படுபவர் கமலாகத்தான் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை..

Most Popular

Recent Comments