தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பொன்னியின் செல்வன் படத்தை பற்றிய பேச்சாகவே இருக்கிறது. இந்த படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். காரணம் மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி என கலர்ஃபுல்லான நட்சத்திரங்கள் வரலாற்று கதாபாத்திரங்களாக உலா வர இருப்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ரசிகர்கள் மட்டுமல்ல இந்த படத்தில் நடித்த நடிகர்களே கூட, இந்த படம் எப்போது திரைக்கு வரும், இதற்கு ரசிகர்களிடம் எப்படி வரவேற்பு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த படம் பற்றி தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து விதவிதமான கருத்துக்களை கூறி பிரமோஷன் செய்து வரும் நடிகர் பார்த்திபன் இந்த படத்தில் சின்ன பழுவேட்டரையர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

செப்-3௦ஆம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த கதை நிகழும் களமான சோழ சாம்ராஜ்யத்தை நோக்கி அதாவது தஞ்சாவூருக்கு கிளம்பி செல்கிறார் பார்த்திபன்.. அங்கே செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தை 8 மணிக்கு காலை காட்சியை ஜீவி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து, பார்த்து ரசிக்கும் பார்த்திபன். படம் முடிந்ததும் 11 மணிக்கு மேல் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய இருக்கிறார்.