கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் படத்தில் அவரது தங்கையாக நடித்தவர் நடிகை ரவீணா ரவி. அதேசமயம் இவர் அடிப்படையில் ஒரு டப்பிங் கலைஞர்.
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசி வரும் இவர் ஒரு கிடாயின் கருணை மனு என்கிற படத்தின் மூலம் நடிகையாகவும் கதாநாயகியாகவும் இன்னொரு தளத்தில் அடி எடுத்து வைத்தார்.
இந்தநிலையில் இவர் திரையுலகில் நுழைந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன இதைத்தொடர்ந்து தனது மகிழ்ச்சியை அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாக எல்லோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரவீணா ரவி.
இதுகுறித்து அவர் கூறும்போது, “குரல் கலைஞராக என் பத்து வருடங்கள் நிறைவடைகிறது.. பின்னணி குரல் அளிப்பதில் ஆத்ம திருப்தி… என் மனதிற்கு நெருக்கமான இந்த தொழிலை தொடர்ந்து செய்ய உங்கள் ஆதரவே முக்கியமான காரணம்…
எனக்கு மட்டுமில்லை செய்யும் தொழிலிற்கு உண்மையாக இருந்தால் எல்லோருக்கும் கடின உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைத்தே தீரும்
இந்த திரை பயணத்தில் எனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூற கடமைப்பட்டிருக்கிறேன்’. என்று கூறியுள்ளார்.