இன்னும் தமிழில் நாடகங்கள் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் குறிஞ்சி மலர்கள் போன்ற சில நடிகர்கள் இன்னும் நாடக மன்றம் நாடகங்களை தொடர்ந்து நடத்தி வருவது தான். காலமாற்றத்திற்கு ஏற்றாற்போல நாடகங்களிலும் சில புதுமைகளை புகுத்தி இன்றைய இளைஞர்களை கவரும் விதமாக தொடர்ந்து அவற்றை நடத்தி வருகிறார் ஒய்ஜி.மகேந்திரன்.

நாடக உலகில் 61 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இவர் சமீபகாலமாக தொடர்ந்து சாருகேசி என்ற நாடகத்தை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினி அந்த நாடகத்தை ரசித்து பார்த்ததுடன் நாடகக்குழுவினருக்கு பாராட்டும் விதமாக அவர்களை தனது இல்லத்திற்கு வரவழைத்து கௌரவித்தார்.

இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் சாருகேசி நாடகத்தை பார்த்து ரசித்துள்ளார். அதி தொடர்ந்து ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட நாடக குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசும்போது தனக்கும் ஒய்ஜி மகேந்திரனுக்குமான 5௦ வருட நட்பு குறித்து சிலாகித்து பேசினார் கமல்.

எண்பதுகளில் கமலுடன் இணைந்து இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் ஒய்ஜி மகேந்திரன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.