நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மீண்டும் டான் மற்றும் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்து குறுகிய காலகட்டத்திலேயே நிறைய ரசிகர்களை சம்பாதித்து விட்டார் பிரியங்கா மோகன்.

இந்த நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் கேப்டன் மில்லர் என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் பிரியங்கா மோகன்.

இவர் தவிர நிவேதிதா சதீஷ் என்பவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மற்றும் சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
