சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து ஒரு படத்தை உருவாக்கும் படத்தை இயக்குனர் அட்லியிடம் உதவியாளராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார், அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கு டான் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் உடன் டாக்டர் படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா ஒப்பந்தமாகியுள்ளாராம். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் சூரி, பால சரவணன், முனீஸ்காந்த், புகழ் மற்றும் சிவாங்கி ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையோடு தொடங்கியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.