விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் மூன்றாவது முறையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் சிம்புவும் இணைந்திருக்கும் படம் வெந்து தணிந்தது காடு.. இன்று வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. இந்தப்படம் சிம்பு கௌதம் மேனன் இருவரும் முன்பு செய்த படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது..
இந்தப்படம் குறித்து சிம்பு கூறும்போது, மாநாடு படத்திற்கு பின், காதல் கதை இல்லாமல் வித்தியாசமான கதையில் நடிக்க நினைத்தேன். என்னை ரசிகர்களும், பார்வையாளர்களும் வேறு மாதிரியான கதாப்பாத்திரத்தில் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என ஆர்வமாக இருந்தது.
மாநாடு படத்திற்கு பின் இந்த மாதிரி ஒரு கதை தேர்ந்தெடுப்பதில் பெரிய ரிஸ்க் எடுத்தேன். கௌதமும் நானும் ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை வைத்தால் வெந்து தணிந்தது காடு சாத்தியமானது. இது வழக்கமான என் கம்போர்ட் ஜோனில் இருந்து மாறுபட்டு இருப்பதை பார்க்கலாம்” என்று கூறினார் சிம்பு.