V4UMEDIA
HomeNewsKollywoodஅழகிக்கு பிறகு எனக்கு இன்னொரு மைல்கல் படம் சிலாகிக்கும் தங்கர் பச்சான்

அழகிக்கு பிறகு எனக்கு இன்னொரு மைல்கல் படம் சிலாகிக்கும் தங்கர் பச்சான்

அழகியல் நோக்குடன் மனிதர்களின் எதார்த்த வாழ்வியலை படமாக்கும் வெகு சில இயக்குனர்களின் இயக்குனர் தங்கர்பச்சானும் ஒருவர். இடையில் சில காலம் படங்களை இயக்குவதில் இருந்து ஓய்வு எடுத்தவர், தனது மகன் விஜித் பச்சானை வைத்து டக்கு முக்கு திக்கு தாளம் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

அந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார் தங்கர் பச்சான். இந்த படத்திற்கு கருமேகங்கள் கலைகின்றன என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கௌதம் மேனன் யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படம் பற்றி தங்கர் பச்சான் கூறும்போதுபடத்தை பற்றி தங்கர் பச்சான் கூறுகையில் ”பல்வேறு மனிதர்களின் பலவிதமான மனங்கள். மனித உணர்வுகளின் உணர்ச்சித் ததும்பல்கள், சம்பவங்கள் நிறைந்து இருக்கும். உறவுகளின் சிக்கல்கள் குறித்தும் பேசுகிறது. என்னுடைய சிறுகதையை தழுவித்தான் எடுக்கிறேன். ஒவ்வொருவரும் கிடைத்த வாழ்க்கையை கடந்து வந்து விடுகிறோம். திரும்பிப் பார்த்து சரியாக இருந்திருக்கிறோமா, இதை நமக்கு நாமே கேள்வி கேட்டு கொண்டால் எல்லோரும் மாட்டிக் கொள்வோம்.

அழகிக்கு பிறகு இவ்வளவு அழுத்தமாக இப்படம் உருவாகிறது .வெகு நாட்களுக்குப் பிறகு லெனின் இப்படத்துக்கு எடிட்டிங் செய்கிறார். ஜீ.வி பிரகாஷ் உடன் வேலை பார்த்ததில்லை. தேசிய விருது வாங்கினாலும் சாதாரணமாக வந்து நிறைவாக பாடல்கள் போட்டுக் கொடுத்திருக்கார் என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments