ஏ.ஆர் ரகுமான் தற்போது முன்பை விட தமிழில் அதிக படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். அந்தவகையில் தற்போது சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் ரிலீசாக இருக்கிறது.

இதையடுத்து வரும் செப்டம்பர் 30ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகிறது. இதுதவிர மாரிசெல்வராஜ், உதயநிதி கூட்டணியில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்திற்கும் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட ஏழு வருட இடைவெளிக்கு பிறகு மலேசியாவில் மீண்டும் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் ஏ.ஆர்.ரகுமான். மலேசியாவின் கோலாலம்பூரில் வரும் ஜனவரி 28-ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

டிஎம்ஒய் கிரியேஷன் சார்பாக டத்தோ முகமது யூசுப் என்பவர் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். இதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்காக 10,000 அடி உயரத்தில் பறந்த ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட்டில் குதித்து டத்தோ முகமது யூசுப் இந்த அறிவிப்பை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இந்த முறையில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவது மலேசியாவில் இதுவே முதல் முறை ஆகும். இந்த சாதனை மலேசியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பக்கத்தில் அதிக உயரத்திலிருந்து குறிக்கப்பட்ட சாதனையாக வெளியிடப்பட்டுள்ளது.















