V4UMEDIA
HomeNewsKollywood43- ஆண்டுகளாக கல்விக்காக தொடர்ந்து நீளும் சிவகுமாரின் உதவிக்கரம்

43- ஆண்டுகளாக கல்விக்காக தொடர்ந்து நீளும் சிவகுமாரின் உதவிக்கரம்

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மாணவர்களுக்கு அவர்களது கல்வியை தொடரும் வகையில் தொடர்ந்து நற்பணிகள் செய்து வருகிறார் கலையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார். மேலும் அகரம் பவுண்டேசன் என்கிற அமைப்பின் மூலமாக சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து கல்வி நற்பணிகளை தொடர்கின்றனர்

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான, ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 43-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை நுங்கம்பாக்கம் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆஃப் மெட்ராஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.2,50,000/- (இரண்டு லட்சம் ஐம்பதாயிரம் மட்டும்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ஏழைமாணவர்களுக்கான, ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ ஒரு லட்சம், மூத்த ஓவிய கலைஞர் ராமு அவர்களுக்கு ரூ.50,000/- வழங்கப்பட்டது

இந்த நிகழ்வில் சிவகுமார் பேசும்போது, “கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன்.

என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து  வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.’’என்று கூறினார்

நடிகர் கார்த்தி பேசும்போது, “கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து இல்லம் தேடிக் கல்வி, பள்ளி மேலாண்மை குழு, நான் முதல்வன் போன்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களில் அகரம் பங்கெடுத்து வருகிறது” என்றார்.

Most Popular

Recent Comments