இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் இளம் முன்னணி நடிகரான ராம்சரண்-ஐ வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்க இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகை அஞ்சலி நடிக்கிறார்
இந்த படத்தின் படப்பிடிப்பு ஓரளவு முடிந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் நடிகர் எஸ்ஜே சூர்யா.
கடந்த இரண்டு வருடங்களாகவே எஸ்ஜே சூர்யா ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகராக மாறிவிட்டார். குறிப்பாக மாநாடு படத்திற்கு பிறகு எஸ்ஜே சூர்யா நடிப்பை ரசிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் உருவாகி விட்டது.
இந்த நிலையில் ஷங்கர் படத்தில் அவர் இணைந்திருப்பது அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது.
இயக்குனர் ஷங்கரும் எஸ்ஜே சூர்யாவும் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரீடம் வெவ்வேறு காலகட்டத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் என்பது ஒருபக்கம் ஆச்சரியமானது,
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் எஸ்ஜே சூர்யாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பத்து வருடம் கழித்து மீண்டும் ஷங்கர் டைரக்சனில் நடிக்கிறார் எஸ்ஜே சூர்யா