V4UMEDIA
HomeNewsKollywoodஇசை நிகழ்ச்சி நடத்துகிறார் குக்கு வித் கோமாளி புகழ் சிவாங்கி

இசை நிகழ்ச்சி நடத்துகிறார் குக்கு வித் கோமாளி புகழ் சிவாங்கி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி சீசன் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் சிவாங்கி. பின்னணி பாடகியான இவர் தனது அப்பாவித்தனமான பேச்சாலும் நடவடிக்கைகளாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். சினிமாவிலும் கூட பின்னணி பாடல்கள் பாடி வருகிறார் சிவாங்கி .

இந்த நிலையில் முதன்முறையாக லைவ் கான்செர்ட் ஒன்றை நடத்துகிறார் சிவாங்கி. இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெற உள்ளது. இதில்  சிவாங்கி பாடுவது மட்டுமல்லாமல் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடத்த உள்ளார்

மேலும் சிவாங்கியோடு சேர்ந்து சந்தோஷ் பாலாஜி, செபஸ்டியன், விஜே கணேசன், லக்ஷ்மன், மேக்னஸ், அக்ராஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்..

மேலும் இந்நிகழ்ச்சியை நடத்தும் white swan events நிறுவனம் கூறுகையில் மூன்று நாட்கள் நிகழ்ச்சியில் நடத்த உள்ளோம் இதில் முதல் நாள் விஜய் டிவி புகழ் சிவாங்கியின் லைவ் கான்செப்ட் நடைபெற உள்ளது,. இரண்டாவது நாள் டிஜே பிரசாந்த்தின் டிஜே நிகழ்ச்சியும் மூன்றாவது நாளாக Dream Zone நடத்தும் பேஷன் ஷோ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது இதில் சிறப்பு விருந்தினராக பிரித்விராஜ் மற்றும் கருண் ராமன்  கலந்து கொள்கிறார்கள்

மேலும் இவ்விழாவின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் இதுவரை செல்லப் பிராணிகளை அழைத்து வந்து பீனிக்ஸ் மாலில்  ஷாப்பிங் செய்திருக்க மாட்டீர்கள் ஆனால் இந்த முறை உங்களுக்கு பிடித்த செல்லப் பிராணிகளை  அழைத்து வந்தும் ஷாப்பிங் செய்யலாம் என்று தெரிவித்தனர்.

Most Popular

Recent Comments