கார்த்தி நடித்த தேவ் படத்தில் அவருடன் இணைந்து நண்பனாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆர்ஜே விக்னேஷ்காந்த். இவர் சென்னை 28, நட்பே துணை, மீசைய முறுக்கு, மெஹந்தி சர்க்கஸ், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அடிப்படையில் பிளாக் ஷீப் என்கிற யூடியூப் சேனலின் நிறுவனரான விக்னேஷ்காந்த்துக்கு நேற்று திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. தனது உறவுக்கார பெண்ணான ராஜாத்தி என்பவரை திருமணம் செய்துள்ளார் விக்னேஷ்காந்த்.
இந்த திருமண நிகழ்வு தமிழாசிரியர் ஞானசம்பந்தம் அவர்களின் தலைமையில் திருக்குறள் மூலமாக நடைபெற்றது
இந்த நிகழ்வில் விக்னேஷ் கானத்தின் நண்பரான சிவகார்த்திகேயன் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். அதுமட்டுமல்ல நடிகர்கள் விமல், சுப்பு பஞ்சு, அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகியோரும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
விரைவில் பிளாக்ஷீப் நிறுவனத்தின் அடுத்த கட்டமாக ஒரு தொலைக்காட்சி ஒன்றையும் ஆரம்பிக்கிறார்கள் என அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.