தமிழ் சினிமாவில் ஆக்சன் படங்கள், காமெடி படங்கள், ஹாரர் படங்கள் என ஒவ்வொரு ஜானரிலும் படம் இயக்கும் பல திறமையான இயக்குனர்கள் பலர் நிற்கின்றனர். அதேசமயம் விஞ்ஞானபூர்வமான கதைகளை மட்டுமே படமாக இயக்கி வரும் இயக்குனர்கள் என்று பார்த்தால் அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அதில் முக்கியமானவர் தான் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்.
ஸ்பேஸ் திரில்லராக உருவான டிக் டிக் டிக், வேம்பயர் திரில்லரன மிருதன், உயிருடன் வரும் டெடி பொம்மை சார்ந்த காதல் கதையான டெடி என ஒவ்வொரு படமும் அவருக்கு மட்டுமல்ல தமிழ்படைப்புலகத்திற்கே முற்றிலும் புதிதானது. அந்த வகையில் முற்றிலும் புதிதான களத்தில் ஏலியன் சர்வைவல் திரில்லராக ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் திரைப்படம் (செப்டம்பர் 8, 2022) உலகம் முழுக்க வெளியாகிறது.
மேலும் இந்த படத்தில் ஆர்யாவுடன் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரிஷ் உத்தமன், காவியா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் பற்றி சக்தி சௌந்தர்ராஜன் கூறும்போது, ‘கேப்டன் படத்தை பொறுத்தவரை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடும் படியான ஒரு படைப்பை, இது வரை பார்த்திராத விஷுவல்களுடன் புதிய ஆக்சனுடன் பிரமாண்டமாக தர வேண்டுமென்பதாக இருந்தது. முதலில் இது சாத்தியமில்லை என்றே நினைத்தேன்
ஆனால் ஆர்யா மற்றும் ஸ்வரூப் தந்த ஆதரவு எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை தந்தது. என் மீது அவர்கள் வைத்த முழுமையான நம்பிக்கையில் தான் நான் இந்த படைப்பை உருவாக்க முடிந்தது. ஒரு படத்தின் பட்ஜெட்டை விட இயக்குநருக்கும் நடிகருக்கும் உள்ள சுமூகமான உறவால் தான் ஒரு அருமையான படம் உருவாக முடியும் அந்த வகையில் ஆர்யாவுடன் டெடி படத்தில் பணியாற்றும் போதே ஒரு சகோதரர் போன்ற உறவு உண்டாகிவிட்டது” என்று கூறியுள்ளார்.