எண்பதுகளின் இறுதியில் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அமலா. அறிமுகமான காலகட்டத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்த சமயத்தில் அவர் மீது காதல் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார் அமலா. அதன்பிறகு பல வருடங்களாக படங்களிலேயே நடிக்காத நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் இரு மொழிப்படமாக உருவாகியுள்ள கணம் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகிறது.
அதேபோல அவரது கணவர் நாகார்ஜுனா இந்தியில் ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், ஆலியா பட் ஆகியோருடன் இணைந்து பிரம்மாஸ்திரா என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது.
அந்த வகையில் இவர்கள் இணைந்து நடித்த உதயம் படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட முப்பது வருட இடைவெளியில் இவர்கள் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாவது ஆச்சரியமான நிகழ்வுதான்.