கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப் ஐ ஆர் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் பாராட்டு பெற்றது.
அதைத்தொடர்ந்து அவர் நடித்துவரும் இன்னொரு படமான மோகன்தாஸ் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.. இதுதவிர தெலுங்கில் அவர் நடித்துவரும் கட்டா குஸ்தி என்கிற படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. தமிழ் தெலுங்கு என ஒரே நேரத்தில் இருமொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் ஆர்யன் என்கிற படம் தான். பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. இந்தப்படத்தின் மோஷன் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பதும் நடிகர் விஷ்ணு விஷால் தான்.
பிரவீண்.கே என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்கிறார் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு பர்ஃபெக்ட் க்ரைம் ஸ்டோரி ஆக இருக்கும் என படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.