ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றியவர் பி சதீஸ் குமரன். கடந்த 20 வருடங்களாக விளம்பரப் படங்கள், குறும்படங்கள் என ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த இவர் முதன்முறையாக பெண்டுலம் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்துள்ளார்.
எட்டு கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் ராட்சசன், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற அம்மு அபிராமி கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.
நாகராஜசோழன் எம்எல்ஏ, வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகை கோமல் சர்மா, இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் கஜராஜ், சாம்ஸ் உள்ளிட்ட முக்கிய குணச்சித்திர நடிகர்களும் நடிக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில் இந்த படம் சைக்காலஜிக்கல் ஃபேண்டஸி திரில்லராக உருவாக இருக்கிறது என்று கூறியுள்ளார் இயக்குனர் பி சதீஸ் குமரன்