கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்தை மித்ரன் ஜவகர் இயக்கியிருந்தார். நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, முக்கிய வேலடங்களில் பிரகாஷ்ராஜ் பாரதிராஜா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் நித்யா மேனன் நட்பும் அவர்களது காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகின்றன.

மேலும் அனிருத் இசையில் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. குறிப்பாக தனுஷ் எழுதி பாடிய மயக்கமா கலக்கமா என்கிற பாடல் ரிப்பீட் மோடில் கேட்கும் ஒரு பாடலாக ரசிகர்களின் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில் இந்த பாடல் வீடியோ தற்போது யூட்யூப்பில் வெளியிடப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு நாள் கூட ஆகாத நிலையில் இந்த பாடல் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.
