நடிகர் அருண்விஜய்யின் படங்கள் மாதத்திற்கு ஒன்று என வரிசை கட்டி வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த மாதம் இயக்குனர் ஹரி டைரக்சனில் அருண்விஜய் முதன்முறையாக நடித்த யானை திரைப்படம் வெளியானது.

அதைத் தொடர்ந்து கடந்த வெள்ளி என்று அருண்விஜய் முதன்முதலாக நடித்துள்ள தமிழ் ராக்கர்ஸ் என்கிற வெப் சீரிஸ் ஒடிடி தளத்தில் வெளியானது. ஏற்கனவே அருண் விஜய்யை வைத்து குற்றம் 23 என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் அறிவழகன் தான் இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளார். ரசிகர்களிடம் இதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் அருண்விஜய் நடித்துள்ள சினம் என்கிற படம், வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இயக்குனர் ஜி என் ஆர் குமரவேலன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்திலும் அருண்விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.