V4UMEDIA
HomeNewsKollywoodஜானி மாஸ்டரும் கதாநாயகனாக மாறினார்

ஜானி மாஸ்டரும் கதாநாயகனாக மாறினார்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடன இயக்குனர்கள் எல்லாருமே ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறி தங்களது நடிப்பு தாகத்தை தீர்த்துக் கொள்கின்றனர். பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் என ஒரு சிலர்தான் அதை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்த தளங்களுக்கு நகர்ந்து பல வருடங்களாக சினிமாவில் நிலைத்து நிற்கின்றனர். ஒரு சில நடன இயக்குனர்கள் ஒரு படத்தில் நடித்ததுடன் திருப்தியடைந்து, மீண்டும் தங்களது நடனத்துறைக்கே திரும்பி விடுகின்றனர்.

அந்த வகையில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற டான்ஸ் மாஸ்டர் ஜானியும் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஆனால் இங்கே தமிழில் அல்ல. தெலுங்கில் இந்த படத்திற்கு யதா ராஜா தத்தா பிரஜா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

இந்த படத்தில் இன்னொரு நாயகனாக சினிமா பண்டி என்கிற படத்தில் நடித்த விகாஸ் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி வர்மா நடிக்கிறார்.

இந்த படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார் நடிகர் சர்வானந்த்.

இந்தப் படத்தை இயக்குனர் ஸ்ரீநிவாஸ் விட்டலா என்பவர் இயக்குவதுடன் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இணைந்து இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

Most Popular

Recent Comments