விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் கொலை. இந்த படத்தை பாலாஜி குமார் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் தனது பேச்சால் விஜய் ஆண்டனியை அதிர்ச்சி அடைய வைத்ததுடன் படக்குழுவினருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பொதுவாகவே மனதில் பட்டதை பேசுகிறேன் என்கிற பெயரில் நிறைய பேர்களை தெரிந்தோ, தெரியாமலேயோ காயப்படுத்தி வருபவர் இயக்குனர் மிஷ்கின், அந்த வகையில் இவர் நேற்று கொலை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும்போது இதுவரை நான் விஜய் ஆண்டனி நடித்த ஒரு படத்தை கூட பார்த்ததில்லை என்று கூறினார்,

இது அங்கிருந்த விஜய் ஆண்டனியை அதிர்ச்சி அடைய வைத்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. படத்தை பார்க்கவில்லை என்றால் அதை பொதுவெளியில் கூறாமல் தவிர்க்கலாம். அல்லது பார்க்காமலேயே அவரது படங்களை நான் பார்த்திருக்கிறேன். நன்றாக இருக்கிறது என்று கூட கூறியிருக்கலாம்.

ஒரு இயக்குனராக இருக்கும் மிஷ்கின், விஜய் ஆண்டனி போன்ற முன்னணி நடிகர் ஒருவரின் படத்தை பார்க்கவில்லை என்று சொன்னதற்கு நெட்டிசன்கள் பல பேர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இவர் தனது படத்திற்காக கொரியன், ஈரானிய மற்றும் ஹாலிவுட் படங்களை பார்த்து காப்பியடிப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் என்றும் இவருக்கு எங்கே தமிழ் படங்களை பார்க்க நேரம் இருக்கப்போகிறது என்றும் கூட காட்டமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.