கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பு சரத்குமார் நடித்த அரவிந்தன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. இந்த நிலையில் தற்போது சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பரம்பொருள் என்கிற படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்த அமிதாஷ் பிரதன் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். காஷ்மீரா என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஒரு பாடலை உருவாக்குவதற்காக யுவன் சங்கர் ராஜா கடத்தப்பட்டார் என ஒரு அதிரடி தகவலை பரப்பினார்கள்.

அதன் பிறகு யுவன் சங்கர் ராஜா சரத்குமாரிடம், நாயகன் அமிதாஸ் பிரதானிடமும் பாடல் உருவாக்கம் குறித்து கேட்பதாகவும் அவர்கள் ஆலோசனை சொல்வதாகவும் ஒரு புரோமா வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சிப்பர ரிப்பர என்கிற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. படத்தின் புரமோஷனுக்காக என்னென்ன செய்கிறார்கள் பாருங்களேன்.