அருள்நிதி நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான தேஜாவு திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. படம் தொடங்கியது முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் மற்றும் டுவிஸ்ட் கலந்து ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்ந்து படம் பார்க்க வைக்கும் அளவிற்கு திரில்லர் படமாக வெளியானது.

இந்த நிலையில் அடுத்ததாக அருள்நிதி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வரும் படம் டைரி. ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் அருள்நிதி. இந்த படமும் கிரைம் திரில்லர் பாணியிலேயே உருவாகி உள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் இன்னாசி பாண்டியன் கூறும்போது, “இந்த படத்தில் மிக முக்கியமான சண்டைக்காட்சி ஒன்றை மழை பெய்யும் சமயத்தில் நடப்பது போன்று படமாக்கினோம்.

அந்த சமயத்தில் தொடர்ந்து ஆறு மணி நேரம் மழையில் நனைந்தபடி கொஞ்சம் கூட பிரேக் எடுக்காமல் நடித்து கொடுத்தார் அருள்நிதி” என அருள்நிதியின் அர்ப்பணிப்பு உணர்வு குறித்து பெருமிதத்துடன் கூறியுள்ளார் இயக்குனர் இன்னாசி பாண்டியன்