பான் இந்தியா என்கிற புதிய திரை உலக கலாச்சாரம் சமீபகாலமாக அழுத்தமாக பரவி வரும் நிலையில் ஒவ்வொரு மொழியிலிருந்தும் முன்னணி நடிகர்கள் மாற்று மொழிகளில் உருவாகும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்பெல்லாம் குணசித்திர நடிகர்கள் மட்டுமே அப்படி மொழி தாண்டினார்கள்.
முன்னணி ஹீரோக்கள் தங்கள் படங்களை டப்பிங் செய்து வெளியிடுவதுடன் நிறுத்திக் கொண்டார்கள். ஆனால் தற்போது அந்த நிலை மாறி தமிழில் இருந்து முன்னணி நடிகர்கள் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் தற்போது முதல் முறையாக நேரடி தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் தெலுங்கில் பிரின்ஸ் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அனுதீப் என்கிற இயக்குனர் இயக்கி வருகிறார். இந்த படம் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவானாலும் தெலுங்கிலும் தானே டப்பிங் பேச இருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்காக தெலுங்கில் வார்த்தைகளை எப்படி உச்சரிப்பது என்கிற டெக்னிக்குகளை கற்றுக்கொண்டு டப்பிங் பேச இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.


























