Home News Kollywood காபி வித் காதலுக்காக கை கொடுக்கத் தயாராகும் தியாகி பாய்ஸ்

காபி வித் காதலுக்காக கை கொடுக்கத் தயாராகும் தியாகி பாய்ஸ்

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம், காபி வித் காதல். ஜீவா. ஸ்ரீகாந்த். ஜெய் என மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

சுந்தர்.சி படங்கள் என்றாலே காமெடி ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் கலகலப்பான பாடல்களும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். அதிலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளன.

குறிப்பாக மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற ரம்பம்பம் என்கிற பாடலை இந்த படத்தில் ரீமிக்ஸ் செய்து உள்ளார்கள். இதை அடுத்து இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தியாகி பாய்ஸ் என்கிற இந்த பாடலை கலக்கலான ராப் பாடலுக்கு பெயர் போன ஹிப் ஹாப் தமிழா ஆதி பாடியுள்ளார். இந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜாவும் ராஜாவும் இசையும் சேர்ந்து கொள்ள, பாடல் எப்போது வெளியாகும் என்கிற ஆர்வம் இப்போதே ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டுள்ளது.