இமைக்கா நொடிகள் படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா என்கிற படத்தை பிரமாண்டமாக இயக்கியுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விக்ரம் படத்தையே இவர் இயக்குகிறார் என சொல்லப்படும் அளவிற்கு கோப்ரா படம் விக்ரமை கவர்ந்து விட்டது என்று சொல்லப்படுகிறது.
இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென இதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. அதனால் தான் ஆகஸ்ட் 31-ல் வெளியாக இருந்த விருமன் திரைப்படம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகிறது.
கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதற்கு காரணம் என்ன என்று ரசிகர்கள் பலரும் ஆளாளுக்கு பல சந்தேகங்களை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரகுமான் இந்த படத்தின் ரீ ரெக்கார்டிங் பணியை, தான் துவங்குவதாக சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
இப்போது தான் ரீ ரெக்கார்டிங் பணிகளே துவங்கப்படுகிறது என்பதால் தான், படத்தின் ரிலீஸ் தேதியும் தாமதமாகிறது என்கிற தகவல் இதன்மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.