V4UMEDIA
HomeNewsKollywoodஇரண்டாவது படத்தையும் இயக்கி முடித்த பிருந்தா மாஸ்டர்

இரண்டாவது படத்தையும் இயக்கி முடித்த பிருந்தா மாஸ்டர்

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரையுலகில் மட்டுமல்லாமல் பாலிவுட்டையும் சேர்த்து தனது நடனத்தால் ஆட்டி வைத்து வருபவர் பிருந்தா கோபால் மாஸ்டர். இதைத்தொடர்ந்து பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் பாணியில் இவரும் இயக்குனராக உருவெடுத்து துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்த ஹேய் சினாமிகா என்கிற படத்தை இயக்கினார்.

அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தற்போது தனது இரண்டாவது படமாக தக்ஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார் பிருந்தா கோபால். இந்த படத்தில் ஹிர்து ஹரூண் என்பவர் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மலையாள பெரிய அளவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான அனஸ்வரா ராஜன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழுக்கு வருகிறார். மேலும் பாபி சிம்ஹா, ஆர்.கே சுரேஷ், முனீஸ்காந்த் உள்ளிட்டவரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவித்துள்ளார் பிருந்தா மாஸ்டர்.

Most Popular

Recent Comments