நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதியின் மனைவி கிருத்திகா தமிழ் சினிமாவில் வணக்கம் சென்னை என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த காளி என்கிற படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் சில வருடங்கள் படம் எதுவும் இயக்காமல் இருந்த கிருத்திகா உதயநிதி தற்போது பேப்பர் ராக்கெட் என்கிற வெப் சீரிசை இயக்கியுள்ளார்.

இதில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜூலை 29ஆம் தேதி ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் வெளியாகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி, சிம்பு என தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகிறது.