பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் சற்றே வித்தியாசமான குணாதிசயத்துடன் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் நிரூப். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சினிமாவில் வாய்ப்பு எளிதாக தேடி வரும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதே சமயம் அப்படி இதற்கு முந்தைய சீசன்களில் கலந்துகொண்ட ஆரவ், முகேன் ராவ், தர்சன் உள்ளிட்டோருக்கு அப்படி வாய்ப்பு கிடைத்து கிடைத்தும் உள்ளது. அதை அவர்கள் சரியாக பயன்படுத்தினார்களா என்பது வேறு விஷயம்.
அப்படி தற்போது பிக்பாஸ் புகழ் நிரூப்புக்கும் கதாநாயகனாகும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. அந்தவகையில் ரெயின்போ என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் நிரூப். இந்த படத்தில் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் என்பவர் நடிக்க அவர் தவிர இன்னும் ஆறு முன்னணி கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர்.
இந்த படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப இந்த படத்தில் வானவில் ஒரு பிரதான கதாபாத்திரமாக இடம்பெறுகிறதாம். மேலும் மைம் கோபி, மனோபாலா, உள்ளிட்ட பல குணச்சித்திர நடிகர்களும் இந்த படத்தில் இடம் பெறுகின்றனர். இந்த படத்தின் துவக்க விழா பூஜை தற்போது நடைபெற்றுள்ளது.
இந்த படத்தை விவேக் கைபா பட்டாபிராம் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் பிப்ரவரி 14 மற்றும் ஆயிரம் விளக்கு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி ஹோசிமினிடம் உதவியாளராக பணியாற்றியவர். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து இயக்குனர் எஸ்.பி ஹோசிமின் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.