சரவணா ஸ்டோர் அதிபர் லெஜெண்ட் சரவணா தற்போது லெஜண்ட் என்கிற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார். இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மறைந்த சின்ன கலைவாணர் விவேக் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வரும் ஜூலை இருபத்தி எட்டாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பான் இந்தியா படமாக இந்த படத்தை ரிலீஸ் செய்யும் லெஜெண்ட் சரவன இந்த படத்தில் தமிழக, தெலுங்கு, கன்னட வெளியீட்டு உரிமைகளை அந்தந்த மாநிலங்களில் உள்ள மிகப்பெரிய விநியோகஸ்தர்களிடம் வழங்கி அதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்த படம் அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் விதமான கதை அம்சத்தை கொண்டுள்ளதால் எல்லா மொழிகளிலும் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.