பா.ரஞ்சித்தின் படங்களில் ஹீரோவை தாண்டியும் புதிதாக நடிக்கும் அறிமுக நடிகர்கள் கூட ரசிகர்களிடம் கவனம் பெற்று விடுவார்கள். அப்படி கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் ஜானி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ஹரிகிருஷ்ணன். இந்தநிலையில் மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ், விஜயலஷ்மி தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் ஹரிகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/07/sheela-rajkumar-3-682x1024.jpg)
நாயகியாக டூலெட், மண்டேலா திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகை ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்குகிறார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/07/sheela-rajkumar-1-1024x682.jpg)
இன்று நடைபெற்ற இந்தப்படத்தின் துவக்க விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு இந்தப்படத்தின் பணிகளை துவங்கி வைத்தார்.
நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்கையில் நடக்கும் எதார்த்தமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழவிருக்கிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.