தமிழ் திரையுலகை சேர்ந்த இளைய தலைமுறை நடிகர்கள் அனைவருக்குமே நடிகர் திலகம் சிவாஜியுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்துவிட வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும். ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்து விடவில்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் போன்றவர்களுக்கு கிடைத்த அந்த வாய்ப்பு அதன்பின் வந்த இளைய தலைமுறை ஹீரோக்களில் விஜய்க்கு மட்டுமே கிடைத்தது. அப்படி இவர்கள் இரண்டு பேரும் இணைந்து நடித்த படம் தான் ஒன்ஸ்மோர்.
1995ல் வெளியான இந்த படத்தை இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக சிம்ரன் மற்றும் அஞ்சு அரவிந்த் ஆகியோர் நடித்திருந்தனர். அந்த சமயத்தில் ஒரே நேரத்தில் நான்கு படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வந்த சிம்ரனுக்கு ஒன்ஸ்மோர் படம் அறிமுக படம் என்று சொல்லலாம்.
இந்த படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்திருந்தார். அத்துடன் அவர்களது பழைய படம் ஒன்றின் கதையை அழகாக கோர்த்து திரைக்கதையை உருவாக்கி இருந்தார் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரன். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. ஒரு மிகப்பெரிய கவுரவத்தை பெற்றார் நடிகர் விஜய்