V4UMEDIA
HomeNewsKollywoodசிம்புவின் பத்து தல தரிசனம் எப்போது ? ; வெளியான அதிரடி அறிவிப்பு

சிம்புவின் பத்து தல தரிசனம் எப்போது ? ; வெளியான அதிரடி அறிவிப்பு

சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா தற்போது சிம்பு, கௌதம் கார்த்திக் கூட்டணியில் இயக்கியுள்ள படம் பத்து தல. இது இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற முப்டி என்கிற படத்தின் ரீமேக்காக உருவாகி உள்ளது. பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கலையரசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஹைலைட்டாக ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஓரளவுக்கு நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் டிசம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என்கிற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்கள். பொதுவாக சிம்புவின் பட ரிலீஸ் தேதியில் பல முறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது அதனை தவிர்ப்பதற்காகவே முன்கூட்டியே இந்த படத்தின் ரிலீஸ் செய்தியை அறிவித்து உறுதிப்படுத்தி உள்ளார்கள் என்று தெரிகிறது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான மாநாடு படத்தை தொடர்ந்து இந்த வருடம் சிம்புவின் படங்கள் வரிசை கட்டி வெளியாக இருக்கின்றன. இந்த மாதம் சிம்பு ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா ,வரும் செப்டம்பரில் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன..

Most Popular

Recent Comments