இசைஞானி இளையராஜா இசையமைத்த பல பாடல்கள் அவ்வப்போது ரீமிக்ஸ் செய்யப்பட்டு சமீபகால படங்களில் வெளியாகி வந்தன. குறிப்பாக இந்த கால இளைஞர்களும் அந்த பாடல்களை ரசித்து கொண்டாடினார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் வைக்காம போனாலும் என்கிற பாடல் சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் மீண்டும் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் அதே படத்தில் இடம்பெற்ற இன்னொரு ஹிட் பாடலான எஸ்பிபி சித்ரா இணைந்து பாடிய, கமல் குஷ்பூ இணைந்து ஆடிய ரம்பம்பம் ஆரம்பம் என்கிற பாடல் தற்போது சுந்தர் சி இயக்கி வரும் காபி வித் காதல் என்கிற படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது,
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா என்பதால் இந்த பாடலை மீண்டும் பயன்படுத்துவதில் சுந்தர்.சிக்கு எந்த சிரமமும் ஏற்பட்டிருக்காது என்பது பற்றி சொல்லத் தேவையில்லை.
அதிலும் குறிப்பாக இந்தப்பாடல் இந்த படத்தில் உள்ள நட்சத்திரங்கள் அனைவரும் ஆடிப்பாடும் குடும்பம் நடன பாடலாக படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தனது ஒவ்வொரு படங்களிலும் தவறாமல் குடும்பம் நடன பாடலை இடம்பெறச் செய்வதை ஒரு டிரெண்டாகவே மாற்றி வைத்திருக்கும் சுந்தர்.சி அதை பல வருடங்களாக வெற்றிகரமாக செய்து வருகிறார் இந்தப் படத்திலும் அது தொடர்கிறது.
இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது இந்த மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.