சினிமாவில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு என பலவிதமான பயிற்சி அளிப்பதற்காக பல திரைப்பட கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால் இவற்றிலிருந்து சற்றே மாறுபட்டு தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது டிஸிஃப்மா – டீசேல்ஸ் சர்வதேச பிலிம் மற்றும் மீடியா அகடாமி’(DESIFMA – Desales International Film & Media Academy). ஆம் தனது கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு திரைப்பட பயிற்சி அளிப்பதற்காக ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்பட கல்லூரி

அற்றைத்திங்கள் அந்நிலவில் என டைட்டில் வைக்கப்பட்டு உருவாகியுள்ள இந்த படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன். இவர் பாக்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, திருமுருகன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

அதுமட்டுமல்ல சென்னை லயோலா கல்லூரியில் 15 ஆண்டுகளாக மீடியா பாடப்பிரிவில் பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார் தற்போது தனது இந்த மீடியாக்கள் மூலமாக திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்களை உருவாக்கி வருகிறார். மேலும் இந்த படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். பாபி என்கிற அறிமுக இசையமைப்பாளர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இதில் ஹீரோவாக நவீன் குமார் என்ற அறிமுக நடிகர் நடித்திருக்கிறார். ஹீரோயினாக லாவண்யா நடித்திருக்கிறார். மாடலிங் துறையில் பிரபலமாக இருக்கும் இவர் மிஸ்.தமிழ்நாடு உள்ளிட்ட பல பட்டங்களை வென்றிருக்கிறார். இவர்களுடன் சுவாதி, ப்ரேமா உள்ளிட்ட பல புதுமுக நடிகர், நடிகைகள் இப்படத்தில் அறிமுகமாகிறார்கள்.
ஐ.டி. நிறுவனத்தில் புதிதாக இணையும் ஹீரோயினுக்கு, அங்கு மேஜேனிங் டைரக்டராக இருக்கும் ஹீரோ மேல் காதல் ஏற்படுகிறது. அந்த காதல் தீவிரம் அடையும் போது ஹீரோவுக்கு ஏற்கனவே திருமணமான தகவலோடு, அவர் திருமணம் செய்திருப்பதே ஹீரோயினின் அக்காவை தான் என்ற விஷயமும் சொல்லப்படுகிறது. அக்காவின் கணவர் என்ற போதும், விவாகரத்திற்காகக் காத்திருக்கும் ஹீரோவை ஹீரோயின் தொடர்ந்து காதலிக்க, அந்த காதலை ஹீரோ ஏற்றாரா, சமூகம் அதை எப்படி பார்க்கிறது. இவற்றை கடந்து ஹீரோயினின் காதல் என்ன ஆனது? என்பதை சொல்வது தான் இப்படத்தின் கதை.