வெற்றிகரமான இயக்குனராக வலம் வெறும் இயக்குனர் சுந்தர்.சி யும் வெற்றிகரமான நடிகையாக கோலோச்சி வந்த நடிகை குஷ்புவும் வாழ்க்கையில் ஒன்றிணைந்த பிறகு திரையுலகில் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதற்காக அவ்னி சினி மேக்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்து படங்களை தயாரித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த நிறுவனத்தில் பல வருடங்கள் மேலாளராக பணி புரிந்தவர் தான் அன்பு ராஜா. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே, ராசாத்தி மற்றும் மசாலா கபே ஆகிய சீரியல்களின் தயாரிப்பாளராக இருக்கிறார்.


தற்போது இவருக்கும் ஆரோக்கிய உமா என்பவருக்கும் இன்று பிஷப் அந்தோணிசாமி தலைமையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் சுந்தர்.சியும் குஷ்புவும் தம்பதி சகிதமாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தனர்.