V4UMEDIA
HomeNewsKollywoodவிஜய் பிறந்தநாளில் அடுத்தடுத்து வெளியான ஸ்டைலிஷான வாரிசு போஸ்டர்கள்

விஜய் பிறந்தநாளில் அடுத்தடுத்து வெளியான ஸ்டைலிஷான வாரிசு போஸ்டர்கள்

தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் இதுவரை நேரடி தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். மற்ற மாநிலங்களிலும் அவருக்கு ரசிகர் செல்வாக்கு தமிழகத்தை  போலவே பெரிய அளவில் இருக்கிறது.

இந்த நிலையில் முதல்முறையாக தெலுங்கில் நேரடி படம் ஒன்றில் நடித்து வருகிறார் விஜய். இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கிவரும் இந்த படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும் இன்று விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இன்னும் இரண்டு டைட்டில் போஸ்டர்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று விஜயின் பிறந்த நாளில் சூப்பராக ஸ்டைலிஷான 2 போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

காய்கறி ஏற்றி வரும் லாரியில் பின்பக்கம் விஜய் ஹாயாக கால் மேல் கால் போட்டு படுத்துக்கொண்டிருப்பது போலவும் அவரது அருகில் குழந்தைகள் அமர்ந்திருப்பது போலவும் உருவாகியுள்ள ஒரு போஸ்டர் நிச்சயம் இந்த படத்தில் புதிய விஜய்யை தெலுங்கு இயக்குனர் நமக்கு காட்டுவார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

Most Popular

Recent Comments