சுசீந்திரன் இயக்கத்தில் முதன்முறையாக விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் படம் வள்ளிமயில். அதிரடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் ஆண்டனி, இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமான ஒரு கேரக்டரில் நடிக்கிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக ஃபரியா அப்துல்லா நடிக்கிறார். இவர் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜதிரத்னாலு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். முதல் படத்தின் வெற்றி முகமே தற்போது தமிழிலும் அவரை கதாநாயகியாக மாற்றியுள்ளது.

இந்நிலையில் இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் வள்ளிமயில் படக்குழுவினர் அவருக்காக ஸ்பெஷல் பிறந்தநாள் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

படத்தில் வள்ளிமயில் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதால் புராண காலத்து வள்ளி கெட்டப்பில் இந்த போஸ்டரை அவர்கள் வடிவமைத்து அவருக்கு பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளனர்.