விஜய் ரசிகர்களுக்கு விஜய் படம் வெளியாவது ஒரு திருவிழா என்றால் அவரது பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி இன்னொரு திருவிழா என்று சொல்லலாம். பட ரிலீசை தியேட்டர்களில் கொண்டாடி அதகளப்படுத்துவார்கள்.
அதேசமயம் விஜய்யின் பிறந்தநாளை ஊருக்கு ஊர், தெரு தெருவுக்கு உள்ள மக்களுடன் சேர்ந்து கொண்டாடுவதுடன் நலிவடைந்தவர்களுக்கு, மாணவர்களுக்கு என பலருக்கும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்

அந்த வகையில் இந்த வருடம் வரப்போகும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 18.06.2022 (சனிக்கிழமை) மாலை 6.00.மணியளவில் மறைமலை அடிகள் சாலை (சுதேசி மில் அருகில்) மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சுமார் ரூபாய்.9,25,000/-(ஒன்பது லட்சத்து இருபத்தைந்தாயிரம்) மதிப்பிளான செலவில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 1000 நபர்களுக்கு தலா 5 கிலோ வீதம் அரிசியும், 925 பெண்களுக்கு புடவையும், 225 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களும், 15 நபர்களுக்கு காது கேட்டும் கருவி,700 நபர்களுக்கு சர்க்கரையும், 200நபர்களுக்கு கடிகாரமும், 150 நபர்களுக்கு டிபன் பாக்ஸ், 5 நபர்களுக்கு ஆடு, 1 ஏழை மாணவருக்கு லேப்டாப், 25 நபர்களுக்கு ஐயன் பாக்ஸ், 70 நபர்களுக்கு பிளாஸ்டிக் வாலி, 70 நபர்களுக்கு பிளாஸ்டிக் குடம், விளையாட்டு பொருட்கள்

கிரிக்கெட் செட் 1 குழவிற்கும், 3 நபர்களுக்கு கேரம் போர்டு, 25 நபர்களுக்கு சேர்,100 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், ஜாமன்டிரி பாக்ஸ் மற்றும் உப்பளம் தொகுதி அம்பேத்கர் சாலையில் உள்ள திரு. முத்துஜான் என்கிற நபருக்கு மருத்துவ உதவியாக ரூபாய்.10,000/-த்தையும், புதுச்சேரி மாநில செயலாளர் திரு.G.சரவணன் மற்றும் புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முன்னிலையில் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி. N.ஆனந்து அவர்கள் வழங்கினார்.