V4UMEDIA
HomeNewsKollywoodவிஜயகாந்த் நிஜமாகவே நடிக்கிறாரா இல்லையா ? விஜய் மில்டன் ஓபன் டாக்

விஜயகாந்த் நிஜமாகவே நடிக்கிறாரா இல்லையா ? விஜய் மில்டன் ஓபன் டாக்

பிரபல ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக கோலிசோடா, கடுகு 10 எண்றதுக்குள்ள ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் மில்டன். தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கேப்டன் விஜயகாந்த் ஒரு முக்கியமான, அதே சமயம் சில நிமிடங்களே வந்து போகும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக கூறியிருந்தனர்.

இந்த நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து விஜய் மில்டனிடம் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு எப்போது நடைபெறும் என்று கேட்கப்பட்டதற்கு, ‘விஜயகாந்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு படப்பிடிப்பு நடத்த தீர்மானித்துள்ளோம். இந்த படத்தில் விஜயகாந்த் நடித்தே ஆக வேண்டிய தேவை இருக்கிறது. ஒருவேளை அவரை வைத்து படப்பிடிப்பு நடத்த அவரது உடல்நிலை ஒத்துழைக்காவிட்டால் அவரது குரலையாவது இடம்பெற செய்யலாமா என்கிற முடிவை அப்போதைக்கு தீர்மானிப்போம்” என்று கூறியுள்ளார்

Most Popular

Recent Comments