V4UMEDIA
HomeNewsKollywoodகமலை இயக்கும் விஸ்வரூபம் எடிட்டர்

கமலை இயக்கும் விஸ்வரூபம் எடிட்டர்

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. சொல்லப்போனால் கமல் சின்னத்திரைக்கு போய்விட்டார், அரசியலுக்கு போய் விட்டார், இனி சினிமாவில் அவ்வளவுதான் என சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு மூக்கில் விரல் வைக்கும் விதமாக ஆச்சரியமான வெற்றியை கொடுத்து, கமலை மீண்டும் திரையுலகிற்கு ஓடும் குதிரையாக எழுத்து வந்துள்ளது விக்ரம் திரைப்படம்.

இந்த படத்தை அடுத்து கமல் நடிப்பில் இந்தியன் 2 எப்போது மீண்டும் ஆரம்பிக்கப்படும், சபாஷ் நாயுடு படம் துவங்கப்படுமா இல்லையா என்பது குறித்த கேள்விகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கின்றன. இருந்தாலும் கமலின் அடுத்த படம் இவை இரண்டும் அல்ல.. வேறு ஒரு புதிய படத்திற்கு கமலே கதை எழுதியுள்ளார்.. அந்த படத்தை இயக்குபவர் விஸ்வரூபம் படத்திற்கு படத்தொகுப்பு செய்த எடிட்டர் மகேஷ் நாராயணன் தான்.

விஸ்வரூபம் சமயத்தில் எடிட்டராக இருந்த அவர் அதற்குப்பின் வந்த வருடங்களில் மலையாள திரையுலகில் டேக் ஆப், சீ யூ சூன், மாலிக் என மூன்று படங்களை இயக்கி சில பல விருதுகளையும் குவித்தவர். இந்த நிலையில்தான் கமல் தமிழில் அவரை தன் படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகப்படுத்துகிறார். இந்த தகவலை சமீபத்தில் கமலே ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Most Popular

Recent Comments