லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம் படம் ஜூன்-3ல் வெளியாகிறது. ஏற்கனவே சோசியல் மீடியாவில் இந்த படம் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் தொடர்ச்சியா என்பது போன்ற சில செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் வெளியாவதை முன்னிட்டு ஒரு அறிக்கை ஒன்றின் மூலமாக வேண்டுகோள் வைத்துள்ளார். அதாவது ஏற்கனவே கைதி படம் பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் அனைவரும் கைது படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு அடுத்ததாக விக்ரம் படத்தை பாருங்கள் என்பது போன்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
அதாவது கைதி படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆன நிலையில் அந்தப் படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு மறந்து இருக்கலாம் என்பதாலும் அது தொடர்பான காட்சிகள் விக்ரம் படத்தில் இணைக்கப்பட்டு இருக்கலாம் என்பதாலும், இப்படி ஒரு வேண்டுகோளை லோகேஷ் கனகராஜ் வைத்துள்ளார் என்றே தெரிகிறது.