மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் குயீன் என்கிற வெப் சீரிஸாக இயக்கி வெளியிட்டார்.. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் இந்திரஜித்தும் நடித்துள்ளனர்..
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மூன்று மணி நேர திரைப்படத்தில் சொல்ல முடியாது என்பதால்தான் இதனை 30 எபிசோடுகள் கொண்ட வெப் சீரியஸாக உருவாக்கி வந்தார் கௌதம் மேனன். அதேசமயம் எம்ஜிஆர் மறைவு உள்ள வரை உள்ள நிகழ்வுகளை முதல் பாகம் என்கிற அளவில் வெளியீட்டு நிறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது இந்த வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. நடிகை ரம்யா கிருஷ்ணன் இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதை தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். இந்த இரண்டாம் பாகமும் முதல் பாகத்தை போல விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.