கடந்த வருடம் நவம்பர் மாதம் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். முக்கியமான வேடத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்திருந்தார். டைம் லூப் பின்னணியில் இந்த கதையை உருவாக்கி இருந்தார் வெங்கட்பிரபு.
இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, சிம்பு இருவருக்குமான ஆடுபுலி ஆட்டம் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியதுடன் காமெடிக்கும் உத்தரவாதம் தரும் விதமாக அமைந்திருந்தது. சற்றே குழப்பமான கதைதான் என்றாலும் அதை பார்க்கும் அனைவருக்கும் புரியும் விதமாக படமாக்கியிருந்தார் வெங்கட்பிரபு.
அதனால் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்ததுடன் சமீபத்தில் தியேட்டர்களில் 100 நாட்கள் என்கிற சாதனை இலக்கையும் தொட்டது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் சேர்த்து இந்த படம் 117 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த வருடத்தின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆக இந்த படம் அமைந்துள்ளது என்று தனது மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.