தற்போது பிரபல நட்சத்திரங்கள் கூட சிங்கிள் வீடியோ ஆல்பங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் இறுதிச்சுற்று படத்தில் கதாநாயகியாக நடித்த ஒரிஜினல் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் தற்போது என்கிற டேய் ஆல்பத்தில் நடித்துள்ளார்.
அதிரடி சண்டை தான் போடுவார் என்று நினைத்து வந்த ரித்திகா சிங் இந்த பாடலில் அதிரடியான நடனமும் ஆடியுள்ளார்.
இன்பராஜ் ராஜேந்திரன் என்பவர் இந்த பாடலை எழுதி அவரே இசையும் அமைத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இன்னொரு பக்கம் திரைப்படங்களில் தற்போது பிசியாக நடித்து வரும் ரித்திகா சிங், பாக்சர், பிச்சைக்காரன்-2, கொலை, வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.