V4UMEDIA
HomeNewsKollywoodதீபாவளி ரிலீசாக வெளியாகும் சர்தார் ; சென்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகுமா ?

தீபாவளி ரிலீசாக வெளியாகும் சர்தார் ; சென்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகுமா ?

இரும்புத்திரை படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் பிஎஸ் மித்ரன். அந்த படத்தை வெற்றிப்படமாக கொடுத்தவர் அதன்பிறகு சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய ஹீரோ திரைப்படம் சரியாக போகவில்லை. இதனை தொடர்ந்து தற்போது கார்த்தி நடிப்பில் சர்தார் என்கிற படத்தை இயக்கியுள்ளார் பிஎஸ் மித்ரன். கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் ரஜிஷா விஜயன் மற்றும் ராசி கண்ணா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தில் கார்த்திக் இரு கெட்டப்புகளில் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக வயதான தோற்றத்தில் கார்த்தி நடிக்கிறார் என்பது ஆச்சரியம் தந்தது

அதேசமயம் தற்போது கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் வெளியாகியுள்ளது அந்த போஸ்டரில் கார்த்தி இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

சிறுத்தை படத்தை தொடர்ந்து இந்த படத்தில் மீண்டும் அதிரடி போலீஸ் அவதாரம் எடுத்துள்ளார் கார்த்தி. வரும் தீபாவளி பண்டிகை ரிலீசாக இந்த படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே கார்த்தி நடித்த கைதி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே சென்டிமென்ட் இந்த சர்தார் படத்திலும் கைகொடுக்குமா என பொருத்திருந்து பார்க்கலாம்.

Most Popular

Recent Comments