அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி கேம், எண்ட்கேம், போன்ற படங்களை இயக்கிய இயக்குனர்கள் ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் தான் தி கிரே மேன். 1500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் ரையான் காஸ்லிங், கிரிஸ் இவான்ஸ், ஜெஸ்ஸிகா ஹென்விக், அனா டி அர்மாஸ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஜூலை 22-ம் தேதி நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
இது ஒரு பக்கா ஆக்சன் படம் என்பது ட்ரைலரை பாக்கும்போதே தெரிகிறது. ஆனால் ட்ரைலரில் தனுஷின் காட்சி ஒரு பிரேமில் தான் வருகிறது என தனுஷ் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
இருந்தாலும் தனுஷிற்கு இந்த படத்தில் வலுவான கதாபாத்திரம் என்றும் அதில் அவரைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்கவில்லை என்றும் இயக்குனர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர் நிச்சயமாக இந்த கிரே மேன் படம் தனுசை ஹாலிவுட்டிலும் கிரேட் மேன் ஆக்கும் என உறுதியாக நம்பலாம்.