தமிழ் சினிமாவைப் பொருத்தவரை திரையுலக பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்த இரண்டு மூன்று வருடங்களுக்குள்ளேயே பிரிந்து விவாகரத்து பெறுவது ஒருபக்கம் அதிர்ச்சி அளித்து வருகிறது என்றால், இன்னொரு பக்கம் பல வருட திருமண பந்தத்திற்கு பிறகும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை களைய முடியாமல் சீனியர் பிரபலங்கள் கூட விவாகரத்து பெற்று வருவதும் மீண்டும் மறுமணம் செய்து கொள்வதும் கூட அவ்வப்போது நடைபெறுகிறது.
இதற்கு சில வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரகாஷ்ராஜ் இப்படி செய்ததை உதாரணமாக கூறலாம். சமீபத்தில் நடிகர் தனுஷ் கூட தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் பிரபல இசையமைப்பாளர் டி.இமான், தான் முதல் மனைவியை ஏற்கனவே விவாகரத்து செய்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக ஒரு புதிய தகவலையும் அறிவித்தார் இமான். திரையுலகில் சீனியர் கலை இயக்குனராக உபால்டுவின் மகள் அமலியைத்தான் இமான் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஏற்கனவே அமலிக்கு முதல் கணவர் மூலமாக நேத்ரா என்கிற ஒரு மகள் இருக்கிறார்.
இந்த நிலையில் இமான் நிகழ்ச்சியான பதிவு ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சிறந்த பெண்மணியான அமலியை திருமணம் செய்வதற்கு காரணமாக இருந்த எனது குடும்ப உறுப்பினர்கள், எனது நலம் விரும்பிகளுக்கு நன்றி. அமலியின் என் அன்பு மகள் நேராகவும் இனி எனது மூன்றாவது மகள் தான். மேத்தாவின் அப்பாவாக இருப்பதற்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அடைகிறேன்.
அதேபோல எனது அன்பு மகள் வெரோனிகா, பிளஸிகா இருவரும் எனது திருமணத்தில் இல்லாதது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம். ஆனாலும் ஒரு நாள் எனது மகள்கள் வீட்டிற்கு வருவார்கள்.. அவர்களை அதிகபட்ச அன்புடன் வரவேற்பதற்கு நாங்கள் பொறுமையாக காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
பெரும்பாலும் திரையுலகை பொறுத்தவரை இதுபோன்ற விவகாரங்களில் தந்தையின் பக்கம் மகள்கள் ஆதரவு காட்டுவது அதிகம் என்பதால் இமானின் காத்திருப்பு சீக்கிரமே நிறைவேறும் என்று எதிர்பார்க்கலாம்.