அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று டான் திரைப்படம் வெளியானது. பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
வழக்கமான பரபர ஆக்ஷன் காட்சிகளோ மிரட்டல் வில்லன்களோ என இல்லாமல் இளைஞர்கள் தங்களது கல்லூரி பருவத்தை கடந்து வரும்போது சந்திக்கும் சவால்கள், சங்கடங்கள், அவற்றை எதிர்கொள்ள வேண்டிய விதம் குறித்து நகைச்சுவையாகவும் அதேசமயம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக அமையுமாறும் இந்த படம் உருவாகி இருந்தது.
அதனாலேயே இளைஞர்கள் மத்தியில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தவிர வழக்கம்போல குடும்பம் குடும்பமாக இந்த படத்தை மக்கள் பார்த்து வருகின்றனர். இந்த ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 50 கோடி வசூலை தாண்டி விட்டதாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் கூறுகிறது.
அந்த அளவிற்கு இது ஒரு வெற்றி படமாக அமைந்துவிட்டது. இந்த வெற்றியை சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.